ஓங்கட்டும் தலைவர் காமராசரின் புகழ்....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க வசவாளர்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வைகோ தலைமையில் சமூகநீதி காப்போம்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

‘புரட்சிப் பெண் போராளி’ ஆங்சாங் சூகியை வாழ்த்துவோம்!


2012 ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியில், மியான்மர் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில், வீராங்கனை ஆங் சாங் சூகி அவர்களின் தேசிய ஜனநாயகக் கட்சி 45 தொகுதிகளில் போட்டியிட்டு 43 இடங்களில் வாகை சூடி, சாதனை புரிந்திருக்கிறது. நாடாளுமன்ற கீழ் சபைகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமு (Kawhmu) தொகுதியிலிருந்து 66 வயதான அம்மையார் சூகி வெற்றி பெற்று எதிர்வரும் 23.04.2012 அன்று நாடாளுமன்ற உறுப்பினராக, தனது கட்சியின் சார்பில் வெற்றி பெற்றவர்களுடன் பதவி ஏற்க உள்ளார்.
சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக மியான்மர் நாட்டு வாக்காளர்கள் அளித்த தீர்ப்பு உலகெங்கும் உள்ள ஜனநாயக ஆர்வலர்களுக்குப் புது நம்பிக்கையையும் பெரு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது! இந்த வெற்றிக்காக ஆங் சாங் சூகி அவர்கள் கடுமையான விலையைக் கொடுத்திருக்கிறார்கள். வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய பர்மாவில் 19.07.1945அன்று ஆங் சான் என்ற பர்மா விடுதலைப் போராட்ட வீரருக்கும் கின் கீ (Khin Kyi) என்ற அம்மையாருக்கும் அன்பு மகளாக அன்றைய ரங்கூன் நகரில் (இன்று யாங்கூன்) சூகி பிறந்தார். அவரது பெயரில் உள்ள ஆங் சான் (Aung San) என்ற வார்த்தைகள் அவரது தந்தையின் பெயரில் இருந்தும், சூ (Suu) என்ற வார்த்தை அவரது பாட்டியின் பெயரில் இருந்தும், கி (Kyi) என்ற வார்த்தை அவரது தாயார் கின் கீ-யின் பெயரில் இருந்தும் எடுக்கப்பட்டு ஆங் சாங் சூகி என்று பெயர் சூட்டப்பட்டார். ‘அம்மா’ என்றும், ‘அத்தை’ என்றும் பர்மிய மக்களாலும், டாக்டர் சூகி என்று அயல்நாட்டு ஊடகங்களாலும் அன்புடன் அழைக்கப்படும் சூகி அவர்களின் இலட்சியப் பயணம் இன்னல்களும், இடர்பாடுகளும், துயரங்களும், சவால்களும் நிறைந்திருந்தவை ஆகும். அவரது தந்தையார் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார்; ஆங் சான் லின் (Aung San Lin) என்ற அவருடைய சகோதரன் எட்டு வயதிலேயே செத்து மடிந்தார். மற்றொரு சகோதரரான சான்டிகோ (San Diego) என்பவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திற்கு நாடு கடத்தப்பட்டார். பூட்டானைச் சேர்ந்த, திபெத்தில் பண்பாட்டுப் பேரறிஞரான ஏரிÞ (Aris) என்பவரை மணந்து, அலெக்சாண்டர் ஏரிÞ, கிம் என்ற ஆண்குழந்தைகளை ஈன்றெடுத்தார். புதுதில்லியில் உள்ள மேரி பள்ளி, ஏசு கான்வென்ட், லேடி ஸ்ரீராம் கல்லூரி, ஆக்Þபோர்டில் உள்ள புனித ஹக் கல்லூரி, லண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள ஓரியண்டல், ஆப்பிரிக்கப் படிப்புக்கான கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி கற்று இளம்கலைப் பட்டப் படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வையும் பெற்று மிகச் சிறந்த கல்வியாளராக உயர்ந்தார். கல்வியில் சிறந்த சூகி விரும்பியிருந்தால் நல்ல அரசுப் பணியில் ஈடுபட்டு சிறந்த குடும்பத் தலைவியாக மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தியிருக்கலாம். ஆனால், அவர் தன் தந்தையார் வழியில் மக்கள் சேவையில் ஈடுபட ஆர்வத்துடன் முன்வந்தார். இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, மக்களாட்சிக்கான போராட்டத்தினை அறவழியில் நடத்திய வீராங்கனையாக அம்மையார் சூகி பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவர் பின்னால் நாட்டு மக்கள் அணிதிரண்டு வந்தார்கள். இதன் விளைவாக இராணுவ ஆட்சியாளர்களின் கடுமையான அடக்குமுறைகளுக்கு சூகி ஆளானார். 1988-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூகியின் அரும்பணியால் மக்கள் மனதில் ஜனநாயக ஆட்சியை மலரச் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது. இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் சக்தி வீறுகொண்டு ஆவேசப் புயலாய் எழுந்து நின்றது. 8888 என்ற மக்களின் பேரெழுச்சி ஆகÞடு 8, 1988 (8.8.88) அன்று இராணுவ ஆட்சிக்கு எதிராக சூகி தலைமையில் புது வெள்ளமாய்ப் பொங்கிப் பிரவகித்து எதிரிகளைத் திக்குமுக்காடச் செய்தது. இதன் விளைவாக தளபதி நீவின் (Newin) என்ற கொடுங்கோலனின் இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டது. 50 இலட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் 26.8.1988 அன்று தலைநகர் Þவீடகன் பகோவாவில் அணிவகுத்து ஆர்ப்பரித்து நின்றார்கள். அவர்கள் மத்தியில் போராட்டத் தளபதியான ஆங் சாங் சூகி அவர்கள் மக்களாட்சியை நிறுவிட அழைப்பு விடுத்து முழக்கமிட்டார். ஆனால், ஐந்து மாத இடைவெளியில் இராணுவத் தளபதிகள் சதிவேலையில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி மீண்டும் அடக்குமுறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, தளபதி ஜன்தா (Junta) தலைமையில் தங்களின் புதிய அரசை ஏற்படுத்தினார்கள். காந்தியடிகளின் அறவழியையும், புத்த பெருமானின் அமைதி வழியையும் தத்துவ நெறியாகப் பின்பற்றி, மக்களிடையே பரப்பி ஜனநாயகம் மீட்கப் போராடி வந்த வீரப் பெண்மணியான ஆங் சாங் சூகி 27.09.1988 அன்று தனது தேசிய ஜனநாயகக் கட்சியை மக்களிடையே அறிமுகப்படுத்தினார். “அச்சத்திலிருந்து விடுபடுங்கள்; துணிச்சலோடு என் பின்னே வாருங்கள்” என்று மக்களை அறைகூவி அழைத்தார். “அச்சம்தான் ஊழலுக்கு, அடிமைத்தனத்தில் மூழ்கிக் கிடப்பதற்கு, போர்க்குணத்தை மழுங்கடிப்பதற்குக் காரணங்களாக இருக்கிறது. எனவே, அச்சத்திற்கு விடுதலை கொடுங்கள்; நாட்டு விடுதலைக்கு என் பின்னே தொடருங்கள்” என்ற சூகியின் முழக்கம், பாமர மக்களையும் போர் வீரர்களாக மாற்றியது. வீராவேசமாய் எழுந்த மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சிய இராணுவ ஆட்சியாளர்கள், 20.07.1989 அன்று சூகியைக் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்தனர். சொந்த மண்ணிலிருந்து எங்காவது ஓடிப் பிழைத்துக் கொள்வதாக முன்வந்தால், விடுதலை செய்து விடுவதாக இராணுவ ஆட்சியாளர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்க முடியாது என்று ஆங் சாங் சூகி துணிச்சலுடன் மறுத்துவிட்டார். இந்நிலையில், 1990 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்தி, புதிய அரசை அமைக்க இராணுவ ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கினார்கள். தேர்தலில் போட்டியிட ஆங் சாங் சூகி அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் அவரது கட்சி களத்தில் நின்றது; வென்றது. மொத்த வாக்குகளில் 59 % வாக்குகளையும் 80 % பாராளுமன்றத் தொகுதிகளையும் பெற்று அறுதிப் பெரும்பான்மையான வெற்றியினை தேசிய ஜனநாயகக் கட்சி பெற்று மக்களிடம் தங்களுக்குள்ள செல்வாக்கினைப் பறைசாற்றியது. இதனை ஏற்க முடியாது என்று இராணுவ ஆட்சியாளர்கள் சண்டித்தனத்தில் ஈடுபட்டனர். சர்வ அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு இராணுவத்தினர் நடத்திய ‘கெடுபிடி’ தேர்தலில், அதிகாரம் சிறிதுமற்ற எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சி முறைகேடாக தேர்தல் நடத்தி தவறான வழியில் அதிக வாக்குகளைப் பெற்று விட்டதாக, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கட்சியிடம் அரசை ஒப்படைக்க மறுத்த இராணுவத்தினர் மீண்டும் சர்வாதிகார இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தார்கள். சூகியின் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை வீரப் பெண்மணி சூகிக்கு வழங்கியதை உலகமே உவந்து பாராட்டியது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ளக் கூட இராணுவ அடக்குமுறை ஆட்சி சூகிக்குத் தடை விதித்தது. ஆங் சாங் சூகியை 15 ஆண்டுகள் தனிமைச் சிறையில், வீட்டுக் காவலில், கடுங்காவலில் வைத்து கொடுமையாகத் தண்டித்த இராணுவ ஆட்சியாளர்கள், ஐந்து முறை மட்டுமே அவர் தனது கணவரைச் சந்திக்க அனுமதித்தார்கள். கொடிய புற்றுநோயால் தாக்கப்பட்டு சூகியின் கணவர் 53 வயதில் 27.03.1999 அன்று மரணமடைந்தார். கணவரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. புற்றுநோய் தாக்கி, வாழ்வின் இறுதிக் காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, இறுதியாக தன் மனைவியைக் காண ‘விசா’ கேட்டு ஆரிÞ முறையிட்டபோதும் கல்நெஞ்ச ஆட்சியாளர்கள் மறுத்து விட்டார்கள். ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அவர்களும், போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் அவர்களும், அமெரிக்க நாட்டு அரசும் “மனித நேயத்தோடு இப்பிரச்சினையை அணுகுங்கள், ஆங் சாங் சூகியை அவரது கணவர் சந்திக்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தனர். ஆனால், இராணுவ ஆட்சி மிருகத்தனமாக அக்கோரிக்கைகளைக் காலில் போட்டு மிதித்தது. கரம்பிடித்த கணவனை மட்டுமல்ல; பெற்றெடுத்த பிள்ளைகளைக் கூடப் பார்ப்பதற்கு அனுமதியில்லை என்று இராணுவ அரசு காட்டுமிராண்டித்தனமாய் நடந்து கொண்டது. 02.05.2008 அன்று நர்கீÞ என்ற புயல் தாக்கி பர்மா நாடு முழுவதும் சீரழிந்து போனது; சீர்குலைந்து போனது. சூகி காவலில் வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கூறையும் பறந்து போய்விட்டது. மின்சாரம் இல்லை. சாதாரண மெழுகுவர்த்தி மட்டும் வழங்கப்பட்டு, இருண்ட வாழ்க்கையில் ஓராண்டுக் காலம் சூகி தள்ளப்பட்டார். ஆகÞடு 2009-இல்தான் அரசாங்கத்திற்கு இவரது நினைவு வந்து, இவரது இல்லம் சரி செய்யப்படும் என்று அறிவித்து, அதன்பின்னர் சிதைந்த இல்லம் சீர் செய்யப்பட்டது. ஆனால், வீட்டுக் காவல் தொடர்ந்தது! 20.07.1989 முதல் 10.07.1995 வரை, 23.09.2000 முதல் 06.03.2002 வரை, 30.05.2003 முதல் 13.09.2010 வரை என மூன்று காலக்கட்டங்களில் சுமார் 15 ஆண்டுக்காலம் வீட்டுக் காவலில் வைத்து சூகி அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். 03.07.2009 அன்று ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் அவர்கள் பர்மாவுக்கு நேரில் சென்று சூகியை விடுதலை செய்யுமாறு அதிபர் தான் ஷீ (Than Shwe) அவர்களிடம் முறையிட்டார். சிறையில் தியாகச் சரித்திரமாய் வாழும் அம்மையார் சூகியைச் சந்திக்க ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் விரும்பியும் அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. ‘அவரைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்தது எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதுகிறேன்’ என்ற வேதனையுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பர்மாவிலிருந்து வெளியேறினார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெருமக்களான அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர், இன்றைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா, தலாய் லாமா, சிரின் பொடி, அடால்ஃப் பியர்சு Þகூவெல், கூட்ரேட் கொரிகன், ரிகோபர்ட் மென்ச், பேராசிரியர் லீ வீ செல், பெட்டி வில்லியம்Þ, ஜாடி வில்லியம்Þ ஆகியோர் ஒன்றிணைந்து ஆங் சாங் சூகி அவர்களை விடுதலை செய்து பேச்சுவார்த்தை நடத்தி மக்களாட்சி முறைக்கு நாட்டைக் கொண்டுவருமாறு கோரியதையும் இராணுவ அரசு பிடிவாதமாக ஏற்க மறுத்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள் 14.08.2009 அன்று ஆங் சாங் சூகி உள்ளிட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டதையும் பர்மாவின் இராணுவ அரசும் நீதிமன்றமும் ஏற்க மறுத்து விட்டன. அமெரிக்காவில் அப்போது நடைபெற்ற ஆசிய நாடுகளின் கூட்டத்திலும் (ASEAN Summit of 2009) அமெரிக்கக் குடியரசுத் தலைவர் இதனை வலியுறுத்தினார். ஆÞதிரேலியா, இÞரேல், தென் கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்Þ, வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளுடன் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் இதே கோரிக்கைகளை முன்வைத்தது உலகின் பார்வையைச் சுண்டி இழுத்தது. ஜப்பானின் ஹத்தோயமா அரசு 2008 ஆம் ஆண்டு 2.82 பில்லியன் யென் தொகையை அந்நிய உதவியாக வழங்கியது. ஆங் சாங் சூகியை விடுதலை செய்து மக்களாட்சி மலர நடவடிக்கை மேற்கொண்டால் மேலும் நிதி உதவி அளிப்போம் என்ற அந்நாட்டின் வாக்குறுதி, இராணுவ அதிபர்களைச் சிந்திக்க வைத்தது. இங்கிலாந்து பிரதமர் ஜோர்டன் பிரவுன் அவர்கள், பர்மாவின் இராணுவ ஆட்சியால் நிலைகுலைந்து போன பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, தனித்துச் செல்லும் போக்கினைக் கண்டித்து, மக்களாட்சி மலர்ந்திட உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த முன்வருமாறு பர்மா இராணுவ அதிபருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி வற்புறுத்தினார். 2008 டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா. மன்றத்தின் பொதுப் பேரவையில் ஆங் சாங் சூகியை விடுதலை செய்யவும், பர்மாவின் இராணுவ ஆட்சிப் போக்கைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகின் 80 நாடுகள் இதனை ஆதரித்து வாக்களித்தன. 25 நாடுகள் பொருளாதார ஆதரவு மட்டுமே தருவதாகத் தெரிவித்து பர்மாவின் தோழமையிலிருந்து விடுவித்துக் கொண்டன. பர்மாவுக்கு எதிராகக் களம் இறங்குமாறு இந்தோனேசியா சீனாவிடம் கேட்டுக் கொண்டது. இவ்வாறு உலக நாடுகள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு ஆங் சாங் சூகிக்காகக் களம் இறங்கியபோது, அந்தப் புரட்சிப் பெண்மணி, தனிமைச் சிறையில், தனது கணவர் அனுப்பிய தத்துவம், அரசியல், வரலாறு, தலைவர்களின் சுயசரிதை ஆகிய நூல்களை ஊன்றிப் படித்து, தன் உள்ளத்தை மேலும் இலட்சிய உறுதியுடன் வைத்துக் கொண்டார். இவ்வேளையில், ஜவகர்லால் நேருவின் பன்னாட்டுப் புரிதலுக்கான விருது, அஞ்சாமைக்கான விருது, யுனெÞகோவின் அமைதி மற்றும் மறுசீரமைப்புக்கான காந்தியடிகள் பெயரிலான பன்னாட்டு விருது என 32 விருதுகளை உலகில் உள்ள நாடுகள் வழங்கி சூகியின் தியாகப் பணிக்கும் அறப் போராட்டத்திற்கும் ஆதரவு தந்து சிறப்புச் செய்தன. உலக அளவில் ஆங் சாங் சூகிக்கு ஆதரவாக எழுந்த சக்திகள் தந்த அழுத்தத்தினாலும், மியான்மரில் நீதிமன்றம் தந்த ஆணை காரணமாகவும், அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குக் காலியான 45 தொகுதிகளில் நடத்த வேண்டிய இடைத்தேர்தல் காரணமாகவும் இராணுவ அரசு சற்றே இறங்கி வந்தது. அந்நாட்டுத் தொழிலாளர் அமைச்சர் ஆங் கீ (Aung Kyi) அவர்களுடனும், அரசுத்துறைத் தலைவர்களுடனும் ஆங் சாங் சூகி நடத்திய பேச்சுவார்த்தை நல்ல பலனைத் தந்தது! இதன்விளைவாக 13.11.2010 அன்று மாலையில் ஆங் சாங் சூகி வீட்டுக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகப் போடப்பட்டிருந்த தடுப்புக் கட்டைகளை எல்லாம் உடைத்துக் கொண்டு, அணை கடந்த வெள்ளமாய், காட்டுத் தீயாய் மக்கள் திரண்டெழுந்து ஆங் சாங் சூகியின் இல்லம் முன் குவிந்தார்கள். பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அவரது செல்வப் புதல்வன் கிம் ஆரிÞ, விசா அனுமதி பெற்று ஓடி வந்து ஆருயிர்த் தாயைச் சந்தித்து பாச மழை பொழிந்தார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் விளைவாக மற்ற அரசியல் கைதிகளும் விடுதலை யானார்கள். தொழிற்சங்கங்களுக்கு அரசின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1.12.2011 அன்று அமெரிக்க அரசின் வெளி உறவுத் துறைச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் சந்தித்து தமது ஆதரவினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா தொலைபேசி வாயிலாக வாழ்த்துத் தெரிவித்தார். இடைத்தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், சூகி 03.03.2012 அன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை எழுச்சியுடன் தொடங்கினார். முதுமை உடல்நலக் குறைவு, தட்பவெப்ப நிலையின் பாதிப்பு எனத் தொல்லைகள் பல குறுக்கிட்டாலும் அவற்றை மன உறுதியாலும் இலட்சிய வேட்கையாலும் எதிர்கொண்டு வாக்காளர்களிடையே ஆதரவைத் திரட்டினார். MRTV என்ற பர்மிய அரசின் தொலைக்காட்சி வாயிலாகவும். செய்தி ஏடுகள், இணையங்கள் வாயிலாகவும் சூகியின் பிரச்சாரம் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. “ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளும். மனித உரிமைகளுக்கு எதிரான அரசின் செயல்பாடுகளும், முறைகேடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன; அதிகரித்துக் கொண்டும் இருக்கின்றன” என்று இராணுவ ஆட்சியின் கொடுமைகளைத் துணிச்சலாக மக்கள் மத்தியில் சூகி அம்பலப்படுத்தினார். “தேர்தலில் வெற்றி பெற்று, அமைச்சர் பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் அப்போது கேட்டார். “நான் ஒரு செய்தியைத் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய அரசமைப்புச் சட்டத்தின்படி நீங்கள் அரசின் உறுப்பினரானால் தேசிய சபையில் உள்ள இடத்தை நீங்கள் காலி செய்ய வேண்டும். எனவே, என்னுடைய இருக்கையைப் பதவியை தேசிய சபையில் இழப்பதற்காகக் கடினமாக உழைக்க வேண்டுமா? அமைச்சராக வேண்டுமா?” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டினாரே தவிர, எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று மயங்கித் தனது தனித் தன்மையை விட்டுக் கொடுக்கவில்லை! இந்த நிலையில் இடைத்தேர்தலில் பெரும்பான்மைத் தொகுதிகளில் சூகியின் கட்சி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைய இருக்கிறது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள் 13.04.2012 அன்று ஆங் சாங் சூகி அவர்களைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நமது நாட்டுத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அவர்களும், மியான்மர் சென்று அங்கு மக்களாட்சி மலர்ந்திட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போக்கு, இலங்கைத் தீவில் இனப் படுகொலை செய்து இராணுவ ஆட்சியை மக்களாட்சி முகமூடிக்குள் நடத்திய கொலை வெறியன் இராஜ பக்சேவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆவேசம் ஆகியவை மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டட்டும்! மியான்மர் நாட்டு மக்களின் ஆதரவினை முழுமையாகப் பெற்று இடைத் தேர்தலைத் தொடர்ந்து மற்ற தேர்தலிலும் வாகை சூட மக்களாட்சியை வேரூன்றச் செய்ய, புரட்சிப் போராளியான - தியாகப் பெண் வேங்கை ஆங் சாங் சூகிக்கு பெண்ணுரிமை போற்றும் நம் இயக்கத்தின் சார்பில் வாழ்த்து மலர்களைக் குவிப்போம்! அவரது விடுதலைக்குக் குரல் கொடுத்து வற்புறுத்திய உலக நாடுகள் மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டவும், மனித உரிமைகளைப் பேணிக் காக்கும் ஜனநாயக நெறிமுறைகள் செழித்து வளரவும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று வற்புறுத்துவோம்! பெண்ணுரிமைக்காகப் புரட்சிக் கவிஞர் பாடிய பாடல் வரிகள் மியான்மரில் நடைமுறைக்கு வருவது கண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறோம்! ஆணுக்கு நிகர் பெண்கள் என்ற அய்யா பெரியாரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வீராங்கனை ஆங் சாங் சூகி தலைமையில் விழித்தெழட்டும் மக்களாட்சி! மலர்ந்து மணம் வீசட்டும் மனித உரிமைகள்!! மண்ணோடு மண்ணாய் மடிந்து போகட்டும் மமதையாளர்களின் சர்வாதிகார ஆட்சி!!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாழ்த்தப்பட்டோர் உரிமை மீட்பில் திராவிடர் இயக்கம்!


தந்தை பெரியார் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்களையும், அவரது அறிவுசார் படைப்புகளையும் தென்னகத்தில் அறிமுகப்படுத்தி, அவரது பெரும் பணிக்குப் பெரிதும் துணை நின்றார். சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் தொடர்ந்து வரும் திராவிடர் இயக்கங்களும், தாழ்த்தப்பட்டோர் அடிமை விலங்கொடிக்க, அறிவாளர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து களத்தில் நின்று போராடினார்கள் என்பதுதான் தமிழகத்தின் கடந்த நூறாண்டு கால வரலாறு!
1899-ஆம் ஆண்டில் சென்னையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் புராண நாடகம் ஒன்று நடைபெற்றது. நாடகத்தை நடத்திய கம்பெனியினர், நாடகக் கதைச் சுருக்கத்தினை வெளியிட்டு துண்டறிக்கை வாயிலாக விளம்பரம் செய்தனர். அந்தத் துண்டறிக்கையில் நாடகம் பார்ப்பவர்களுக்கான, நாற்காலி, பெஞ்சு, சோபா, தரைக் கட்டணங்களைக் குறிப்பிட்டு, இறுதி வாசகமாக, ‘பஞ்சமர்களுக்கு இடமில்லை, மீறி உள்ளே நுழைபவர்கள் போலீசில் ஒப்படைக்கப் படுவார்கள்’ என்று கொட்டை எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் போலேவே 1935-ஆம் ஆண்டில், கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் வசித்து வந்த அக்கிரகாரத்தில், கழிவறையைச் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதிலாக, மற்ற சாதியினரையே நியமிக்க வேண்டும் என்று மலம் எடுக்கக் கூட உள்ளே வரக் கூடாது என்ற மனு தர்மக் குரலை நகராட்சி நிர்வாகமும் ஏற்றுக் கொண்ட கொடுமையும் அப்போது நடைமுறையில் இருந்தது! உத்தமர் காந்தியடிகள் 15.9.1927 அன்று தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் தேசிய உயர் நிலைப்பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து விடைபெற்றுச் செல்லும்போது, பள்ளித் தலைமை ஆசிரியரான பார்ப்பனரிடம் இந்தப் பள்ளியில் எத்தனை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வினவினார். ஒரு மாணவனைக் கூட இதுவரை சேர்க்கவில்லை என்ற தலைமை ஆசிரியரின் விடை, காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! 1938-ஆம் ஆண்டில் நீடாமங்கலத்தில் காங்கிரசு கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு சமபந்தி விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. பார்ப்பனரல்லாத பிற சாதியினர் மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற விதியைத் தெரியாமல் மூன்று ஆதி திராவிட காங்கிரÞ தோழர்கள் விருந்தில் சாப்பிட்டு விட்டார்கள். அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டிவைத்து அடித்து தண்டித்த சம்பவம், காங்கிரசின் தீண்டாமை ஒழிப்பு நாடகத்தின் உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டியது! 1940-ஆம் ஆண்டில், சென்னை வில்லிவாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வாழ்ந்தவர்களுக்கு வந்த கடிதங்களையெல்லாம், அந்த ஊர் எல்லையில் இருந்த கோயிலில், அஞ்சல்காரர்கள் வீசி எறிந்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆதிதிராவிட மக்கள் அங்கு கிடக்கும் அஞ்சல்களைத் தேடி எடுத்து அவரவர்களுக்கு உரியதை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகச் செயல்படுத்தப் பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சாதிய அடக்குமுறைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவிவிடப்பட்ட போதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் இதனைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்கப் போராடினார். குடியரசு ஏடு தலையங்கம் தீட்டியும், கட்டுரைகளை வெளியிட்டும், தாழ்த்தப்பட்டோரின் குரலாய் ஒலித்தது. சுயமரியாதை இயக்கம் தாழ்த்தப் பட்டவர்களைக் கைதூக்கிவிட மாநாடு கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியாளர்களிடம் முறையிட்டது. நீதிக்கட்சி அரசு அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தி, ஆதிதிராவிட மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்தது; வென்றெடுத்தது! தாழ்த்தப்பட்ட மக்களைப் ‘பறையன்’ என்றே அரசின் அனைத்து ஆவணங்களிலும் இழிவாகக் குறிப்பிடப்பட்டதைத் தடுத்து நிறுத்தி, ‘ஆதிதிராவிடர்’ என்ற வரலாற்றுச் சிறப்புக்குரிய இனத்தின் பெயரால் அவர்கள் குறிப்பிடப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சியில், நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் சி. நடேசனார் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்; ஏற்கச் செய்தார். இதன் தொடர் நடவடிக்கையாக தமிழக சட்டமன்றத்திலும் இதற்காக நீதிக்கட்சியினர் செயலில் ஈடுபட்டார்கள். 20.01.1922 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் எம்.சி. இராசா அவர்கள் ‘ஆதிதிராவிடர்’ பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தபோது, நீதிக்கட்சியின் சார்பில் ராவ் பகதூர் நம்பெருமாள் (செட்டி) அதனை வழிமொழிந்தும், வைரம் பிள்ளை ஆதரித்துப் பேசியும் தீர்மானத்தை நிறைவேற்ற வற்புறுத்தினார்கள். நீதிக்கட்சி அரசு, அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘ஆதிதிராவிடர்’ என்றே குறிப்பிட வேண்டும் என்று ஆணையிட்டது. தமிழ்நாட்டில் ‘பேருந்துகளில் பஞ்சமர்களுக்கு இடமில்லை’ என்ற அறிவிப்பும், இதே வாசகங்கள் பயணச் சீட்டின் பின்புறத்தில் அச்சடிக்கப்பட்டும் ஆதிதிராவிடர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்த கொடுமைக்கு முதன்முதலாக முடிவு கட்டிய பெருமை சுயமரியாதை இயக்கத் தலைவர், பட்டிவீரன்பட்டி W.P.A. சௌந்திரபாண்டியனாருக்கு மட்டுமே உண்டு. அன்றைக்கு ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த முகவை மாவட்டத்தின் மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவராக இருந்த சௌந்திர பாண்டியனார் அவர்கள், ஆதி திராவிடர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமம் பறிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்து, அவர்களையும் சமமாகப் பிற சாதியினருடன் அமரச் செய்து அமைதிப் புரட்சியை ஆரவாரமின்றி அரங்கேற்றிக் காட்டினார்! பட்டுக்கோட்டை தாலுக்கா போர்டுக்கு, அந்த ஊரின் மேற்குத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரும் உறுப்பினரான நிலையில், போர்டு கூட்டத்தினைக் கூட்டினால், அவருக்கும் சமமாக இடம் தர வேண்டுமே என்ற எண்ணத்தில், போர்டு கூட்டத்தையே கூட்டாமல், தலைவர் ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தார். சுயமரியாதைச் சங்கத்தினர் இதனைக் கண்டித்துக் கூட்டங்களை நடத்தி, போராட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்கள்; முதல்வர் டாக்டர் சுப்பராயன் அவர்களிடமே முறையிட்டார்கள். தாலுக்கா போர்டு கூட்டத்தைக் கூட்டாவிட்டால், தாலுக்கா போர்டு நிர்வாகத்தையே கலைத்து விடப் போவதாக முதல்வர் எச்சரிக்கை செய்தார். இதன் விளைவாக தாலுக்கா போர்டு கூட்டம் கூட்டப்பட்டது. மாரிமுத்து அவர்களுக்கும் சரியாசனம் தந்து சிறப்பிக்கப்பட்டது. கோவில்களில் உள்ள வானளாவிய கோபுரங்களை, வீதியில், தொலைவில் நின்று வணங்க வேண்டுமே தவிர கோவில்களுக்கு அருகிலோ உள்ளேயோ வரக் கூடாது என்று ஆதி திராவிடர்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகக் கொடுமைக்கு எதிராகவும் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் கோவில் நுழைவுப் போராட்டங்களை நடத்தியது. திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ஆதிதிராவிட மக்களை அழைத்துக் கொண்டு ஆலய வழிபாட்டுக்குச் சென்ற நீதிக்கட்சித் தலைவர்களான கே.வி. இராமநாதன், டி.வி. சுப்ரமணியன் ஆகியோர் மலைப்படிகளில் இருந்து உருட்டி விடப்பட்டு மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார்கள். ஈரோடு கோயில் கருவறைக்குள்ளே ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற மாயூரம் நடராசன், பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத்தவர்களை உள்ளே வைத்துப் பூட்டி சிறைவைத்த கொடுமையும் அந்தக் கால கட்டத்தில் நடந்தது. இதனைத் தொடர்ந்துதான் ஆலய நுழைவுப் போராட்டம் வீறுகொண்டெழுந்தது! ஆதிதிராவிட மக்கள் தெருக்களில் நடந்தாலே தீட்டு என இழிவுக்கு ஆளாக்கப்பட்டதை மாற்றி, எல்லா தெருக்களிலும் அவர்கள் நடக்கலாம் என்பதற்கே ஆணை பிறப்பித்த அரசு நீதிக்கட்சி அரசு! இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு என முதல் அமைச்சகத்தை, நீதிக்கட்சி அரசின் முதல்வர் பனகல் அரசர் அவர்கள்தான் உருவாக்கி, அவர்களை அமைச்சர்களாக்கி உயர்த்திப் பெருமை சேர்த்தார்! சட்டமன்றத்தில் தாழ்த்தப்பட்டவர் களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆங்கிலேயே அரசிடம் வற்புறுத்து வதற்காக, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம். நாயர் 1918-ஆம் ஆண்டு தம் சொந்தச் செலவில் லண்டன் சென்றார். ஆங்கிலேய அரசு, டாக்டர் நாயர் அவர்களின் கருத்துப் பிரச்சாரத்துக்குத் தடைசெய்து முட்டுக்கட்டையிட்டது. தளர்ச்சி காணாத நாயர் அவர்கள், தனித்தனியாக ஆங்கிலேய அதிகாரிகளையெல்லாம் சந்தித்து, தடையை நீக்கச் செய்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். வகுப்புரிமையின் பெயரால் இன்று தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் பெற்று வரும் வாய்ப்புகளுக்கு அடித்தளமிட்ட பெருமை டாக்டர் நாயர் அவர்களுக்கு மட்டுமே உண்டு. நீதிக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘திராவிடன்’ ஏடு (3.11.1917) தலையங்கத்தில் “தொடப்படாதவர்கள் என்றும் அணுகப்படாதவர்கள் என்றும், தாழ்ந்தவர்கள் என்றும் தூற்றப்படும் பறையர், பள்ளர், புலையர், தீயர் முதலான நம் சகோதரர்களும் கல்வியில் பெரிதும் பயின்று நல் ஒழுக்கமும், நல் ஆச்சாரமும், நன்னாகரிகமும் அடைந்து. இந்து ஜன சமுதாயத்தில் பிற சாதியோர்களோடு சமத்துவத்தைப் பெற்று அவர்கள் அனுபவிக்கும் உரிமைகளையும், சுதந்திரங்களையும் அனுபவிக்க நாளுக்கு நாள் இடைவிடாமல் முயன்று நம் இந்திய நாடு சுய ஆட்சி பேற்றுக்குப் பக்குவமுடையோராக்கச் செய்வார்களாக!” என சுட்டிக்காட்டி இருப்பதில் இருந்து தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் நீதிக்கட்சியின் ஆவலையும், அக்கறையையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். பேராசிரியர் லட்சுமிநரசிம்மு என்பவர் திராவிட இயக்கத்தின் சீரிய சிந்தனையாளர்; சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் இயல்பியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய அறிவாளர். பாரதியாரால் எனது நாத்திக நண்பர் என்று பெருமைப்படுத்தப்பட்டவர்; சுவாமி விவேகானந்தரை சென்னையில் (1897) சந்தித்து சுயமரியாதை இயக்கத்தின் சிறப்புகளை எடுத்து வைத்தவர். இத்தகைய பல்துறை விற்பன்னரான லட்சுமி நரசிம்மு 4.11.1917 அன்று சென்னையில் நடைபெற்ற பௌத்த மாநாட்டில் நிகழ்த்திய உரையினை திராவிடன் ஏடு (8.11.1917) வெளியிட்டது. அரசியல் விடுதலையை விட சமுதாய விடுதலையே முதலில் நாம் அடைய வேண்டியது என்பதை விளக்கி அப்போது உரையாற்றினார். “சாதி ஒழிய வேண்டும். அப்போதுதான் மக்கள் ஒன்றுபட்டு அன்பு வாழ்க்கை நடத்துவார்கள். மாறுபாடு இல்லா ஒற்றுமையும், ஒழுக்கமும் வந்த பின்னரே ஹோம் ரூல் நன்றென்றும் மக்கள் தம்மில் பிரிவுபட்டு, பிளவுபட்டு ஒருவரிடத்தே ஒருவர் துவேசம் பாராட்டி, குரோதமும், வன்மையும், இன்னும் தேச முன்னேற்றத்திற்குச் சிறிதும் பொருந்தாத இழிகுணங்களும் எல்லோருள்ளத்தும் வேரூன்றியிருக்கும் இப்போது ஹோம் ரூல் கொடுக்கப்படுமாயின் தேசத்தில் எங்கு பார்த்தாலும் குழப்பம் உண்டாகும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கி எல்லோரும் இன்ப வெள்ளத்தில் மூழ்கும்படி பேசி முடித்தார்” என்ற திராவிடன் இதழின் செய்தி, சாதி ஒழிப்பிலும், சமத்துவம் காண்பதிலும் நமது இயக்கம் கொண்டிருந்த பேரார்வத்தை எடுத்து விளக்குகிறது. “பஞ்சமர்களை விட்டுவிட்டு, ஏனைய பிராமணர் அல்லாதார் மாத்திரம் முன்னேறி விட வேண்டும் என்று தென்னிந்திய மகாஜன சங்கமும், திராவிடன் அபிமானிகளும் கருதுபவர்கள் அல்லர்” என்ற திராவிடன் இதழின் (10.9.1917) கட்டுரை ஆதிதிராவிடர்களையும் இணைத்துக் கொண்டு சமத்துவத்திற்கான போராட்டத்தில் திராவிடர் இயக்கம் போராடிய பாங்கினை விளக்குகிறது. “பிராமணரல்லாத நம்மவருள் உள்ள சாதி வித்தியாசங்களைப் போக்கி நம்மவரையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி நலம் பெறச் செய்யவே பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றியுள்ளது. பஞ்சமர் முன்னேற்றத்திற்கான பல கட்டுரைகளையும் தலையங்கங் களையும் செய்திகளையும் “திராவிடன்” வெளியிட்டு வலியுறுத்தியது சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய பங்களிப்பாகும். (பக்கம் 329) என்ற The Non Brahmin’s up neavel and caste differences ஆங்கில நூலின் கருத்து, திராவிடன் இதழும் நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டோர் உயர்வுக்காக ஆற்றிய அளப்பரிய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டியது. இதே தன்மையில்தான் திராவிடர் இயக்கம் தன் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திராவிடர் இயக்க நூற்றாண்டு தொடர்ந்திடும் இவ்வேளையில், அம்பேத்கர் பிறந்தநாளுக்கு தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவும், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் படம் இடம் பெறவும், அம்பேத்கரின் இலட்சியத் தோழர் இரட்டைமலை சீனுவாசனுக்கு அஞ்சல்தலை வெளிவரவும் குரல் கொடுத்து சாதனைச் சரித்திரம் படைத்த இலட்சியத் தலைவர் வைகோ அவர்களைத் தலைவராகக் கொண்டுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் பெருமையுடன் - அரிமா நோக்கில் - தாழ்த்தப்பட்டோர் உரிமை மீட்புக்கான நம் பணிகளை நினைவுகூர்வோம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரண தண்டணை ஒழிப்பு – பஞ்சாபும் தமிழகமும்!


தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்தர்சிங் ரோஜனாவைக் காப்பாற்றவும், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கச் செய்யவும் பஞ்சாப் மாநில மக்கள் ஓரணியில் திரண்டு, கிளர்ந்தெழுந்து போராடி வருகிறார்கள். இந்திராகாந்தி அம்மையாரின் படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சீக்கியப் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் பட்டனர். ஒரு பெரிய ஆலமரம் விழும்போது, நிலம் அதிரத்தான் செய்யும் என்று இக்கொடுமையையும் நியாயப்படுத்தியதைக் கண்டு நாகரிக சமுதாயம் வெட்கித் தலைகுனிந்தது. மனிதநேயத்தின் கொடி அரைக்கம்பத்தில் கண்ணீரில் நனைந்து கனத்தோடு பறந்தது.
இதன்எதிர்வினையாக 31.8.1995 அன்று பஞ்சாப் தலைமைச் செயலகத்தின் வாயிலில் முதலமைச்சர் பியாந்த் சிங் அவர்கள் தனது காரில் ஏறி அமரும்போது, மனித வெடிகுண்டால் தாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். இந்திராகாந்தியின் கொலையைத் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நியாயம் வேண்டும் என்று வற்புறுத்தியும் நாங்கள் தான் இந்தச் செயலில் ஈடுபட்டோம் என்று சீக்கியர் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய பப்பர் கல்சா என்ற அமைப்பு பொறுப்பேற்றது. மனித வெடிகுண்டாக இச்சம்பவத்தில் ஈடுபட்ட திலாவர்சிங் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். பயிற்சிகொடுத்து, திட்டமிட்டு, கொலையை மூளையாக இருந்து நடத்திய ஜக்தர்சிங்அவரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். படுகொலைக்காக திட்டமிடும் போது, ஒருவேளை திலாவர்சிங் முயற்சியில் தோற்றுப் போனால், இரண்டாவது மனித குண்டாக மாறி திட்டத்தை நிறைவேற்ற பல்வந்தர் சிங் ரோஜனா முன்வந்தார். நான்தான் வெடிமருந்து பெல்ட்டை கட்டி விட்டேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்த இவர் இதுவரை கருணை மனு கொடுக்கவும் மறுத்து விட்டார். மரண தண்டனைக்குப் பிறகு தனது விழிகளை, பொற்கோயிலில் மதகுருவாக சேவை செய்யும் பார்வையற்றவர்களுக்கு கொடையாக அளிக்கவும், தனது உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துவிட்டு முடிவை எதிர் நோக்கி பல்வந்தர்சிங் ரோஜனா காத்திருக்கிறார். 11 ஆண்டு விசாரணைக்குப் பிறகு அரியானா நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. சண்டிகார் உயர்நீதிமன்றம் மார்ச் 31 அன்று தூக்குத் தண்டனைக்கு நாள் குறித்து 5.3.2012 அன்று ஆணையிட்டது. அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாட்டியாலா சிறையின் கண்காணிப்பாளர் நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டிய சிறை ஊழியர் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிறையிலிருந்து வெளியேறிவிட்டார். சீக்கியர்களின் மத அமைப்பான அகால் தக்த், மரண தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பாதல் அவர்களுக்கு கட்டளையிட்டது. அடுத்த 12 மணி நேரத்தில் (26.3.2012) சட்டமன்றத்தில் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அவர்கள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என அனைத்து உறுப்பினர்களும் தங்கள் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து தங்களின் ஒன்றுபட்ட உணர்வை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள். படுகொலைக்கு ஆளான முதல்வர் பியாந்த் சிங் காங்கிரÞ கட்சியைச் சேர்ந்தவர். ஆனாலும் கூட காங்கிரÞ கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் கேப்டன் அம்ரந்தர் சிங், தூக்குத் தண்டனைக்கு எதிரானவன் நான் என்று பகிரங்கமாக நீதிமன்ற வாயிலிலேயே அறிவித்து இப்பிரச்சினையை ஆதரிக்கிறார். சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டியின் தலைவர் அத்வார்சிங், பஞ்சாப் மாநில ஆளுநர் சிவராஜ் பாட்டீல் அவர்களை நேரில் சந்தித்து, மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தவும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கவும் வேண்டுகோள் மனுவை அளித்து முறையிட்டார். 28.03.2012 முதல் வேலை நிறுத்தம், கடை அடைப்புப் போராட்டம் என பஞ்சாப் மாநிலமே கந்தக பூமியாய் மாறி தங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கொட்டி உலகின் கவனத்தையே சுண்டி இழுத்தது. முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அவர்களும் அன்றே குடியரசுத் தலைவரைச் சந்தித்து இதற்கான மனுவை அளித்து முறையிட்டார். குடியரசுத் தலைவர் மனுவை உடனே மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க, மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் இதற்காக முறையிடாத நிலையில், மற்றவர்கள் இதற்காக முறையிடுவது ஏற்க இயலாது. கண்டனத்திற்குரியது என உச்சநீதிமன்றம் கருத்து சொன்னாலும் கூட, மனித உரிமை அமைப்புகள் - தன்னார்வ அமைப்புகள், பஞ்சாப் மாநில அரசு ஆகியோரின் வற்புறுத்தலை ஏற்று மத்திய அரசு மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஆணையிட்டுள்ளது. 28.03.2012 அன்றே முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அவர்களை நமது தலைவர் வைகோ அவர்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பெரும் பதட்டத்தில் இருந்து பஞ்சாப் விடுபட்டுள்ளது என்று நமது தலைவர் வைகோ அவர்களிடம் முதல்வர் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார். மரண தண்டனைக்கு எதிரான, நம்மைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்களுக்கும், மனித நேயப் பற்றாளர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்திதான். 2007 ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றம் உலக நாடுகள் அனைத்தும் மரண தண்டனை விதிக்கும் தங்கள் நாட்டு சட்டங்களை நீக்கிவிடவேண்டும் என்று வற்புறுத்திய சூழலில், உலகில் 135 நாடுகள் மரண தண்டனையை தங்கள் நாடுகளில் ஒழித்துவிட்டன. இந்தியா இதனைப் பின்பற்றவில்லையே என்ற பெரும்குறை நம்மைப் போன்ற மனித நேயம் கொண்டோருக்கு உண்டு. இருப்பினும் 1981 ஆம் ஆண்டு முதல் 90 சதவிகித மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு ஆறுதலான செய்தி! மரண தண்டனைக் கைதிகளில் 23 பேருடைய கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் அவர்கள் ஏற்றுக்கொண்டு வாழ்நாள் தண்டனையாகக் குறைத்துள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்தில் 17 பேரைக் கொலை செய்த பியாராசிங், அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம்சிங், குருதேவ் சிங் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக்கப்பட்டுவிட்டது. உத்திரபிரதேசத்தில் மூன்று பேரைக் கொன்று அவர்களின் தலையை வெட்டி எடுத்து ஊர்வலமாக வீதியில் சென்றவன் - 10 வயது சிறுவனைச் சுட்டுக் கொன்று அவனது உடலை தீயில் இட்டு கொடும் செயலில் ஈடுபட்டவன் என்ற குற்றங்களுக்கு ஆளான செரோம், ஷியாம் மனோகர் ஆகியோரின் தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில், மூடநம்பிக்கையால் மூளையை இழந்து தனது ஒன்பது வயது சிறுவனை மந்திரவாதியின் முன்னே நரபலியிட்டுக் கொன்ற சுசில் மர்மு என்பவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை, வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டு அவரின் உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது. நம் தமிழகத்தில் ஈரோடு அருகில், தனது குடும்பச் சொத்தை அபகரித்து ஏமாற்றிய மாமனை பழிவாங்கும் வெறியில் மாமாவையும் அவரின் 3 சிறிய குழந்தைகளையும் கொன்ற கோவிந்தசாமிக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது. திருத்துவது (Reformation), வஞ்சம் தீர்ப்பது (Retribution) தயக்கப்படுத்துவது (Deterrece) என தண்டனைகளில் மூன்று கோட்பாடுகள் உண்டு. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் வகையில் நீதி வழங்குவது என்பது மருந்தே நஞ்சாகி விடுவதைப் போன்றது. எனவே, குற்றவாளிகளை வஞ்சம் தீர்க்கும் வகையில் கடுமையான தண்டனை தந்து அவனது உயிரைப் பறிப்பது கொடுமையானது என்ற மனிதநேய சித்தனை உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் வேளை இது! “உலகிலேயே படுமோசமான கயவனையும் கூட திருத்த முடியும். பொருத்தமான பயிற்சியின் வாயிலாக, பொருத்தமான சீர்படுத்தலின் வாயிலாக, மனப்பாங்கை மாற்றும் படியான பொருத்தமான வழிமுறைகளின் வாயிலாக, பொருத்தமான சகவாசத்தின் வாயிலாக, பொருத்தமான விழுமங்களைப் புகட்டுவதன் வாயிலாக மனிதனை மாற்ற முடியும். இது மிருகத்தை மனிதனாக்குகிற முயற்சி. இதுதான் இப்போது தேவைப்படுகிறது” என்று ராஜேந்திர சிங் வழக்கில் தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துகளை நீதி அரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் தமது தீர்ப்பில் ஆணையாகக் குறிப்பிட்டிருந்தார். இவை எல்லாம் நடைமுறைக்கு வருவது மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனாலும்கூட, மரண தண்டனையில் சிக்கியுள்ள 91 குற்றவாளிகளின் கருணை மனுக்களில் 23 மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, 18 பேருடைய மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு விட்டன. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஐந்து பேருடைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இவர்கள் அனைவரும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சதோடு சிறைக்கம்பிகளுக்கு இடையில் நாள்தோறும் மரணபயம் கவ்விப் பிடித்துள்ள நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்குவதில் உள்ள விருப்பு வெறுப்பு - அரசின் நெருக்குதல் இவைகளினால் அல்லலுறும் இவர்களின் அவல வாழ்விற்கு தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கம் நம் நெஞ்சை துளைத்தெடுக்கிறது. “கருணை என்பதற்கு வேண்டியவர் - வேண்டாதவர் எல்லோரும் ஒன்றுதான். கருணையில் பாகுபாடு பார்க்கும் நிலை ஏற்பட்டால் அது கருணை அல்ல; சந்தர்ப்பவாதம் தான்.” கருணை மனு கொடுத்த சில மணி நேரங்களிலேயே தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும்போது இந்த முடிவு பல்வந்தர்சிங் மீது ஏற்பட்ட பரிவினால் அல்ல, முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. இந்த அரசியல்தான் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒருவகையான மனக்கசப்பை மேலும் கூட்டுகின்றது. ஒரு கொலைக்குற்றவாளியின் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைப்பதில், நீதிமன்றத்தினைக் காட்டிலும் கூடுதலாக ஒரு சலுகை. இதை அதிகாரம் என்று சொல்ல முடியும். இது அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் உள்ளது. இதனை அனைவருக்கும் ஒன்றாகப் பயன்படுத்தாமல், வேண்டிய கைதிகளுக்கு ஒரு கருணையும், வேண்டாத அரசியல் கட்சிகளைச் சார்ந்த கைதிகளுக்கு கருணை மறுப்பும் முறையா? கருணையிலும் பாகுபாடு என்பது ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போன்றது. ஒன்று மரண தண்டனையை சட்டத்திலிருந்து எடுத்து விடுங்கள் அல்லது கருணை அரசியலை தூக்கிலிடுங்கள். பாரபட்சமான கருணை பல்வேறு பாரபட்ச நிலைக்கு வழி வகுக்கும்”. மேலே நாம் எடுத்துக்காட்டிய கருத்துகள் தினமணி (02.4.2012) ஏட்டில் ‘கருணையல்ல சந்தர்ப்பவாதம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் உள்ளவையாகும். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் படுகிற பாட்டை எண்ணிப் பார்த்தால், இதயம் கனக்கிறது. நாள்தோறும் சிறுகச் சிறுக என்னைக் கொல்வதைவிட, ஒரே நாளில் என்னைக் கொன்றுவிடுங்கள் என்று சிறைக்கொட்டடியில் இருந்து பேரறிவாளன் எழுப்பிய குரல், நம் இதயத்தில் வாளாய்ப் புகுந்து பிளக்கிறது. 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தவர்களை, அரசமைப்புச் சட்ட விதி 161இன் படி, நடுவண் அரசின் ஆலோசனையைப் பெறாமலேயே மாநில அரசு விடுதலை செய்யலாம். ஆனால், நளினி, ராபர்ட் பயாÞ, ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் இருபது ஆண்டுகள் தனிமைச் சிறையில் கடுமையான தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். மருத்துவர்கள், சிறை அதிகாரிகள் விடுதலை செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள். கருணை மனு, கண்ணீர்க் கடிதம், கையெழுத்து இயக்கம் என தொடர்ந்து முறையீடுகள்.. ஆனாலும், கிணற்றில் போட்ட கல் போல நீதி புதைகுழியில்தான் கிடக்கிறது. என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள் எனறு ராபர்ட் பயாÞ கோரிக்கை வைக்குமளவிற்கு, இருட்டறையில் கிடக்கும் இந்த எளியவர்களுக்கு நீதியின் வெளிச்சம் இன்னமும் மறுக்கப்பட்டே வருகிறது! நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஓய்வு ஒழிச்சல் என்று நம் தலைவர் வைகோஏறி இறங்கி நீதிக்காக குரல் கொடுத்து மூவர் உயிர் காக்க முனைப்புடன் பாடுபட்டு வருகிறார். நமது இயக்கம் பல்வேறு சங்கடங்களுக்கும், நெருக்கடிகளுக்கும், சவால்களுக்கும் இடையில் மரண தண்டனையை மாண்டொழியச்செய்ய தொடர்ந்து களத்தில் நின்று காரியமாற்றி வருகிறது. கட்சி எல்லைகளைக் கடந்து இன விடுதலைக்கு வீதியில் நின்று போராடி வரலாற்றில் நிலைத்து நிற்கும் சீக்கியர்களின் போர்க்குணமும், தியாகமும் தமிழர்களுக்கு வரும் நாள் எப்போது? என்ற எண்ணம் நம் இதயத்தின் எல்லா அறைகளிலும் ஏக்கமாய்த் தேங்கி- நிரம்பி வழிகிறது!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொடர்ந்திடும் வல்லாதிக்கம்...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS